Saturday, October 31, 2009

[ தக்காளிச்சாதம் ]

தக்காளிச்சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.

ஆரிசி.-------- 100 கிராம்
தக்காளிப்பழம். 2 பெரியது
வெண்காயம். 1 பெரியது
பச்சைமிளகாய் . 2
கடுகு. கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு. அரை ஸ்பூன்
வெந்தயம். அரை ஸ்பூன்
சாம்பார் பொடி. அரை ஸ்பூன்

சாதத்தை உதிராக வடித்துக்கொள்ளவும்.வெண்கா
யத்தயும் மிளகாயையும் பொடிப்பொடியாக நறுக்கொள்
ளவும்.தக்காளிப்பழத்தையும் துண்டுகளாக நறுக்கி வைத்
துக்கொள்ளவும்.வெறும் இருப்புச்சட்டியில் வெந்தயத்தை
வறுத்து எடுத்துக்கொண்டு அம்மியில் உப்பு சேர்த்து பொடி
செய்து வைத்துக்கொள்ளவும்.

இருப்புச்சட்டியில் மூன்று ஸ்பூன் எண்ணை விட்டு கடுகு,
உளுத்தம்பருப்பு வறுத்துக்கொண்டு பொடிப்பொடியாக நறுக்
கி வைத்துள்ள வெண்காயம் , பச்சைமிளகாயையும் போட்டு
நன்றாக வதக்கவும். இவை வதங்கியதும் நறுக்கிவைத்துள்
ள தக்களிப்பழத்தைப் போட்டு அரை ஸ்பூன் சாம்பார் பொடியை
யும் சேர்த்து வதக்கவும். வதங்கியபின் முன்பே வடித்து வைத்
துள்ள சாதத்தில் கொட்டி வெந்தயப்பொடியையும் கொட்டி நன்றா
கக்கிளறவும். எல்லாம் ஒன்றுசேர்ந்துவிட்டால் இப்போது டெமே
டோ பாத் என்கின்ற தக்காளிச்சாதம் ரெடியாகிவிட்டது.

No comments:

Post a Comment