Friday, October 2, 2009

எலுமிச்சம்பழச்சாதம்

எலுமிச்சம்பழச்சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.

அரிசி. ------------------ 150 கிராம்
எலுமிச்சம்பழம்.---- ஒன்று (1)
கடுகு. ------------------ அரை ஸ்பூன்.
கடலைப்பருப்பு.----- அரை ஸ்பூன்.
உளுத்தம்ப்ருப்பு. --- அரை ஸ்பூன்
வெந்தயம். ----------- அரை ஸ்பூன்.
வற்றல் மிளகாய். -- ஆறு (6)
பெருங்காயம். சின்னத்துண்டு.
முந்திரிப்பருப்பு. ----- ஆறு (6)
உப்பு. --------------------- தேவையான அளவு
நல்லெண்ணை .------ தேவைக்கேற்ற அளவு


சாதத்தை உதிராக வடித்துக்கொள்ளவும். ஒரு அகன்ற
பாத்திரத்தில் உதிராக வடித்த சாதத்தைக் கொட்டி ஆற
வைக்கவும். அதன் மீது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை
யும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை யையும் விட்டு நன்
றாகக்கிளறி ஆறவைக்கவும்.

ஒரு இருப்புச்சட்டியில் எண்ணை சேர்க்காமல் வெந்தயத்தை
வறுத்து எடுத்துக்கொண்டு. அதே சட்டியில் சிறிது எண்ணை
விட்டு இரண்டு வற்றல் மிளகாயை வறுத்து எடுத்துக்கொள்
ளவும். வறுத்தெடுத்த வெந்தயம், மிளகாயுடன் அளவான
உப்பும் சேர்த்து அம்மியில் பொடி செய்து சாதத்தில் தூவவும்.

இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை சேர்த்துக்கொண்டு சிறிது
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டாகக்கிள்ளிய
வற்றல் மிளகாய், முந்திரிப்பருப்பு மற்றும் பெருங்காயத்தை
யும் சேர்த்து வறுத்து எடுத்து சாதத்தில் கொட்டவும். எலுமிச்
சம்பழத்தைப்பிழிந்து சாறு எடுத்து அதையும் சாதத்தில் கொட்டி
கருவெப்பிலை யும் சேர்த்து நன்றாகக்கிளறி கொள்ளவும்.

எல்லாம்ஒன்றாகச் சேர்ந்த பின்பு வேறு பாத்திரத்தில் எடுத்து
வைத்துக்கொள்ளவும். இப்போது லெமன் ரைஸ் என்கின்ற
எலுமிச்சம்பழச்சாதம்ரெடியாகிவிட்டது.

No comments:

Post a Comment