Friday, January 1, 2010

தேங்காய்த் துவையல்

தேவையான பொருட்கள்.

துவரம்பருப்பு. ........... 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு. ...... 1 ஸ்பூன்
தேங்கய்த்திருவல். 1 மூடி

வற்றல் மிளகாய். 2
புளி கொட்டைப்பாக்கு அளவு

உப்பு. ................... கால் ஸ்பூன்

பெருங்காயம். சிறு துண்டு.

செய்யும் முறை:

இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை விட்டு துவரம்
பருப்பு, கடலைப்பருப்பு, வற்றல் மிள்காய் மற்றும்
பெருங்கயத்துண்டு இவற்றைவறுத்துக்கொண்டு
புளி, உப்பு சேர்த்து சிறிது அரைத்துக்கொண்ட பிறகு
தேங்கய்த்துருவலைச்சேர்த்து அரைத்துக்கொள்ள
வேண்டும். இந்தத்துவையலுக்கு நன்கு மைய
அரைக்கவேண்டும்மென்பதில்லை. விருப்பப்
பட்டால் ஒரு பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக்
கொள்ளலாம்.