Tuesday, October 6, 2009

எள்ளோதரை என்கின்ற எள் சாதம்

எள் சாதம் செய்யத்தேவையான பொருட்கள்.
அரிசி. --------- 200 கிராம்
நல்லெண்ணை.--- 4 ஸ்பூன்
உழுத்தம்பருப்பு. -- 1 கரண்டி
வற்றல் மிளகாய். 4
எள். -----------1 கரண்டி
உப்பு. --------- அரை ஸ்பூன்
பெருங்காயம். --- சிறு துண்டு.

முதலில் எள்ளுப்பொடி செய்துகொள்ளவேண்டும்.
செய்முறை:-
இருப்புச்சட்டியில் எண்ணை சேர்க்காமல் முத
லில் எள்ளை வறுத்து தனியாக வைத்துக்கொள்ள
வும். பின்பு அந்த இருப்புச்சட்டியில் சிறிது எண்ணை
சேர்த்துக்கொண்டு உழுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய்,
பெருங்காயம் முதலியவற்றை வறுத்துக்கொள்ளவும்.
வறுத்தெடுத்த பொருட்களை எள் சேர்க்காமல் உப்பு
சேர்துக்கொண்டு அம்மியில் வைத்துப்பொடி செய்து
கொண்டபின்பு எள்ளையும் அதனுடன் சேர்த்து பொ
டிசெய்து கொள்ளவும்.

சாதத்தை உதிரிப்பதமாக வடித்துக்கொள்ளவும். பின்பு
அந்த சாதத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை
ஊற்றி நன்கு உதிர்த்துக்கொண்டு எள்ளுப்பொடியைச்
சேர்த்துக்கொண்டு மிகுதி நல்லெண்ணையையும்
சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் கடைசியில்
கருவேப்பிலையச்சேர்த்துக்கொள்ளவும். இப்போது
எள் சாதம் தயாராகிவிட்டது.

3 comments:

Menaga Sathia said...

நல்ல குறிப்பு!!

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கு எள்சாதம்,

குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுகக்லாம், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

Vishaya janam said...

எள் சாதம் செய்ய பச்சரிசி ஒரு பங்கு எள் 1/4 பங்கு நெய்1/8 பங்கு சேர்க்கவேண்டும்

Post a Comment