Sunday, November 8, 2009

பால் கோவா செய்யும் முறை

தேவையானப்பொருட்கள்.
டின் பால் (மில்க் மெயிட்) 1 டின் (500 கிராம்)
கெட்டித்தயிர். 125 கிராம்.
பால். 150 மில்லி லிற்றர்
நெய். 100 கிராம்

செய்யும் முறை:
ஒரு( non stick) ஒட்டாத பாத்திரத்தில் டின் பாலையும் தயிரையும்
ஒன்றாகப்போட்டு கட்டி இல்லாமல் நன்றாகக்கரைத்து வைத்துக்
கொள்ளவேண்டும்.பினபு அக்கலவையுடன் பாலையும் சேர்த்து
அடுப்பில் வைத்து கொதிக்கவிடவேண்டும். அடுப்பில் இருக்கும்
பாலில் ஒரு மரக் கரண்டியால் கை விடாமல் தொடர்ந்து கிண்டிக்
கொண்டே இருக்க வேண்டும். முதலில் பாத்திரத்தில் உள்ள கல
வை தண்ணியாகத்தான் இருக்கும். சிறிது நேரங்கழிந்ததும் கொஞ்
சம் கெட்டி ஆனவுடன் அரைவாசி நெய்யைச் சேர்த்து கிண்டவும்.
சிறிது நேரம் கழித்து பால்க்கோவா பதம் வருமுன்பு மீதியாக உள்ள
நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கை விடாமல் கிண்ட
வேண்டும். பால் கோவா நெய்யைக் கக்கும் பதம் வந்ததும் அடுப்பி
லிருந்து இறக்கிவிடவும். இப்போது சுவையானதும் மிருதுவானது
மான பால் கோவா ரெடியாகிவிடும்.

8 comments:

Menaga Sathia said...

super recipe!!

M.Thevesh said...

Mrs.Menagasathia said...

super recipe!!

உங்கள் வரவுக்கும் பாராட்டுகளுக்கும்
மிக்க நன்றி.

வடுவூர் குமார் said...

நெய் இவ்வளவு தேவைப்படாது என்று மனைவி சொல்கிறாரே!!

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

M.Thevesh said...

வடுவூர் குமார்.உங்கள் வரவுக்கும் கருத்து
களுக்கும் நன்றி. குத்துமதிப்பாக நெய் சொல்லப்
பட்டது ருசியைப்பொறுத்து கூட்டி,குறைத்துக்
கொள்ளலாம்.

M.Thevesh said...

தமிழ்நெஞ்சம் அவர்களே உங்கள் வரவுக்கும்
வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள்.உங்களுக்கும்
என் அன்பான வாழ்த்துக்கள்

PaUl IsAcC said...

சர்க்கரை சேர்க்கவேண்டாமா?

Unknown said...

ஙக

Post a Comment