Saturday, November 28, 2009

கடைசிவரை கண்ணாடி போடாமல்

கடைசிவரை க்ண்ணாடி போடாமல் இருக்கவிரும்புகிறீர்
களா அப்படியானால் தவறாமல் தினம் கரட் கிழங்கைப்
பச்சையாக உண்ணுங்கள்.

பால் வெண்ணை சாப்பிட் டால் நிறைய விட்டமின் ' ஏ '
கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கிடைத்த
வரப்பிரதாசம் கரட் கிழங்கு.நிரையக்கரட்ஜ சேர்த்துக்
கொண்டால் அதே அளவு விட்டமின் ' ஏ ' பெறமுடியும்.
கரட்டில் "காரடீன்" என்கின்றசிறப்புப்பொருள் இருக்கிறது
இதுவே விட்டமின் உண் டாவதற்குக்காரணமாக இருக்கி
றது அதனால் தொத்து நோய் வராமல் விரட்டுவது.

வயிற்றில் அமிலம் காரணமாகப் புளியேப்பம், பசி
மந்தம் ஏற்படுகிறதா அப்படியானால் கரட்டைத்துருவி
பச்சடி போட்டுச்சாப்பிடுங்கள் அது நிவாரணமாகும்.
கொளுப்பு காரணமாக உடல் பருமனைக்குறைக்க
பட்டினி இருந்தேன் அப்பிடியும் பலன் கிடைக்கவில்லை
யே என்ற கவலையா, கவலையை விடுங்கள் கரட்
பச்சடி அடிக்கடி சாப்பிட்டுவாருங்கள் நீங்கள் அதிச
யப்படும் விதம் இளைப்பீர்கள். கொளுப்பைக்குறைக்
கும் சக்தி கரட்டின் தனித்தன்மை.

கிருமிகளை நாசம் செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.
இரத்தக்குறைவு காரணமாக சோகை ஏற்பட்டால்
தொடர்ந்து தினம் கரட் சாப்பிட்டு வந்தால் புதிய
இரத்தம் ஊறி சோகை நோய் நீங்கும். புதிய இரத்
தத்தை உற்பத்தி செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.

சிறுநீர் சம்பந்த மான கோளாறுகளை நிவர்த்தி
செய்யும் ஆற்றல் கரட்டுக்கு இருக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரட் சாப்பிட்டால்
நோய் கொஞ்சம் கட்டுப்படும்

தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் விளம்
பரப்படுத்தும் சோப்புகளை விட நீங்கள் கரட்டை
நம்பலாம். கரட் சருமத்தைப்பாதுகாத்து மென்மை
யாகவைத்திருக்கிறது.

கரட்டை பச்சை உணவாக உண்பதே சிறந்த பலனைக்
கொடுக்கும். நம் நாட்டுக்காய் கறிகளை விட விலை
மலிவாக கரட் நம் நாட்டில் கிடைப்பதால் அதை வாங்கி
உண்டு பயன்பெறுவோமாக.

Thursday, November 19, 2009

கீரையும் அதன் மருத்துவக்குணங்களும்

ஏழைகளின் சொத்து என்று சொல்லப்படும் கீரை
விலை மலிவான சாதாரணப்பொருட்களிலும்
நிறையப்பலன்கள் பெறமுடியும் என்பதற்கு ஓர்
எடுத்துக்காட்டாகும். சில முக்கியகீரைகளின்
பலன்கள் பின்வருமாறு:

அரைக்கீரை: தினமும் உண்ணக்கூடியகீரை
வகைகளில் இது முதன்மையானது. எல்லா
நோயாளிகளும் உண்ணக்கூடியது.கண் பார்
வைச்சிறப்பாகவைத்திருபதற்கு இந்தக்கீரை
பயன்படுகிறது.இரத்தநாளங்கள், ஜீரண உறுப்
புகளை நல்லநிலையில் பாதுகாப்பாகவைத்
திருக்க இது ஒரு சிறந்தகீரை. பிரசவமான
மகளிருக்கு உடனடியான் ஊட்டம் அளிக்கும்
வல்லமை இந்தக்கீரைக்கு இருக்கிறது.

மணத்தக்காளிக்கீரை: வாயில் ஏற்பட்ட புண்,
வயிற்றுப்புண் முதலியவற்றிக்கு கண்கண்ட
சஞ்சீவி என்று இக்கிரையைக்கூறுவார்கள்.
மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல்
வளம் பெருகும். அல்சர் என்கின்ற நோய்க்கு
அற்புத மருந்தாகும். வாரம் இரு முறை உண்
ணக்கூடியகீரைகளில் இதுவும் ஒன்று.

பசளைக்கீரை: மலச்சிக்கலை விரட்டுவதில்
வல்லது.ஆண்மையைப்பலப்படுத்தும் , குளிர்ச்
சிதரும் கீரைகளில் இதுவும் ஒன்று. ஆனால்
ஆஸ்துமா போன்றநொய் உள்ளவர்கள் இக்
கீரையைக்கோடை காலத்தில் மட்டுமே
உண்ணவும்.

வெந்தியக்கீரை: இதில் புரதம், தாதுக்கள்,
மற்றும் விட்டமின் சி முதலியன் அபரித
மாக இருக்கிறது.வாயுவைக்கண்டிக்கும்
கல்லீரலைச்சுறுசுறுப்பாக்கும். வாரம்
ஒருமுறை இக்கீரையை உண்டுவர
மூட்டுவலி,இடுப்புவலி போன்றவை
நீங்கும்.சிறுநீர்கோளாறு கிட்டவே வராது.

முளைக்கீரை: இக்கீரை எல்லா வயதினரும்
தினம் சாப்பிடக்கூடியது. பசி இல்லாதவற்கு
பசியைத்தூண்டக்கூடிய கீரை. காசநோயின்
போதுவரும் காச்சலைக்கட்டுப்படுத்தக்கூடியது.

அகத்திக்கீரை: இதில் வைட்டமின், இரும்புச்
சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது. விஷங்க
ளை முறிக்கும். கண் பார்வை சம்பந்தப்பட்ட
நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. வயிற்றில்
உள்ளகிருமிகளைக் கொல்லக்கூடியது. ஆனால்
வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் வயோதிகர்
உண்ணக்கூடாது. மாதத்தில் ஒரு முறை மட்டும்
உண்ணத்தக்கது.

கரிசலாங்கண்ணி கீரை: இக்கீரை முதுமைத்தோற்
றத்தைக்கட்டுப்படுத்தும். கண் பார்வை கூர்மை
யடையும்.பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது.
இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.

புளியாரைக்கீரை: காயகல்பத்திற்கு இணையானது
என வள்ளலாரால் பேசப்பட்டது. கபம், பித்தவாயுவை
கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. மூலநோய்க்கும் நாட்
பட்ட கிராணிக்கு இது மாமருந்தாகிறது.


Tuesday, November 17, 2009

எலுமிச்சம்பழத்தின் மருத்துவக்குணம்

குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய பழவகை
களில் ஈடு இணையற்றது எலுமிச்சம்பழம். வாகடத்தில்
இதை அரச கனி என்று கூறுவார்கள்.

இதன் மருத்துவப்பலன்களைப் பெரிய பட்டியில் இட்டே
கூறலாம். அவையாவன:

பித்தத்தைப்போக்கும். தலைவலியைத்தீர்க்கும், மலச்
சிக்கலைப்போக்கும், தொண்டைவலியைப்போக்கும்,
வாந்தியை நிறுத்தும், காலாராக்கிருமியை ஒழிக்கும்,
பல் நோய்களைக்குணப்படுத்தும், டான்சில் வராமல்
தடுக்கும்,விஷத்தைமுறிக்கும், தேள் கடிக்கு உதவும்,
வாய்ப்புண்ணை ஆற்றும்,மஞ்சள் காமாலையை நீக்
கும்,வீக்கத்தைக்குறைக்கும்,வாயுவை அகற்றும்,
பசியை உண்டாக்கும், விரல் சுற்றுக்கு நிவாரணமா
கும், யானைக்கால் வியாதியைக்குணப்படுத்தும்.

ஓட்டலில் அல்லது வெளிச்சாப்பாட்டுக்கடைகளில்
சாப்பிடுபவர்கள் சுத்தம் அற்ற, நன்றாக வேகாத
சமையலை உண்பதால் ஏற்படக்கூடிய வயிற்றுத்
தொல்லையில் இருந்து விடுபட இரண்டு எலுமிச்சம்பழச்
சாற்றுடன் நல்ல பெருங்காயத்தூள் கொஞ்சம், சிறிது
உப்பு சேர்த்து தினம் குடித்து வருவது பெரும் நன்மை
யைஅளிக்கும்.

அணுக்குண்டு சோதனைகள் நடத்துவதால் நீரிலும்
காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத்தடுக்
கும் ஆற்றல் எலுமிச்சம்பழத்தொலில் உள்ள
ப்யோபிளேன் என்ற சத்தில் இருக்கிறது. அதனால்
தினமும் எலுமிச்சம்பழம் சாப்பிடுபவர்கள் கதிரியக்
கத்தைத்தாங்கிக்கொண்டு தப்பி உயிர் வாழ முடியும்.

புற்று நோயாளர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்
படும் கதிரியக்கத்தீங்கை எலுமிச்சம்பழம் தடுகிறது.

விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை,
இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்
சம்பழத்தை எடுத்து உடனடியாக கடித்துச்சாற்றையோ
அல்லது பழத்தைபிளிந்து சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக்
குடித்ததும் களைப்பு நீங்கி தெம்பு ஏற்படும்.

உண்ணாவிரதம் இருப்பவர்கள் அவர்களின் உண்ணா
விரதத்தை முடிக்க எலுமிச்சம்பழச்சாறு கொடுப்பதை
நீங்கள் அறிவீர்கள். இதற்குரிய காரணம் உண்ணா
விரதத்தை விட்டு மறுபடி உண்ணு முன் எலுமிச்சம்
பழச்சாற்றை அருந்தி அதன் பின்பு உண்டால்தான்
சீரணப்பிரச்சினைகள் தோன்றுவதைத்தடுக்கமுடியும்.

Sunday, November 8, 2009

பால் கோவா செய்யும் முறை

தேவையானப்பொருட்கள்.
டின் பால் (மில்க் மெயிட்) 1 டின் (500 கிராம்)
கெட்டித்தயிர். 125 கிராம்.
பால். 150 மில்லி லிற்றர்
நெய். 100 கிராம்

செய்யும் முறை:
ஒரு( non stick) ஒட்டாத பாத்திரத்தில் டின் பாலையும் தயிரையும்
ஒன்றாகப்போட்டு கட்டி இல்லாமல் நன்றாகக்கரைத்து வைத்துக்
கொள்ளவேண்டும்.பினபு அக்கலவையுடன் பாலையும் சேர்த்து
அடுப்பில் வைத்து கொதிக்கவிடவேண்டும். அடுப்பில் இருக்கும்
பாலில் ஒரு மரக் கரண்டியால் கை விடாமல் தொடர்ந்து கிண்டிக்
கொண்டே இருக்க வேண்டும். முதலில் பாத்திரத்தில் உள்ள கல
வை தண்ணியாகத்தான் இருக்கும். சிறிது நேரங்கழிந்ததும் கொஞ்
சம் கெட்டி ஆனவுடன் அரைவாசி நெய்யைச் சேர்த்து கிண்டவும்.
சிறிது நேரம் கழித்து பால்க்கோவா பதம் வருமுன்பு மீதியாக உள்ள
நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கை விடாமல் கிண்ட
வேண்டும். பால் கோவா நெய்யைக் கக்கும் பதம் வந்ததும் அடுப்பி
லிருந்து இறக்கிவிடவும். இப்போது சுவையானதும் மிருதுவானது
மான பால் கோவா ரெடியாகிவிடும்.