கருவேப்பிலை என்பது பதார்த்தங்களிலிருந்து
தூக்கி வீசுவதர்க்காகப் போடப்படுவதில்லை.கரு
வேப்பில்லையின் சத்து நம் உடலில் சேரவேண்
டும் என்பதர்காகவே எல்லப்பதார்த்தத்திலும்
போடுகிறார்கள் ஆகையால் தூக்கி எறியாது
சாப்பிடுங்கள்.
கருவேப்பிலையைச்சாப்பிட்டால் புரதம், இரும்
புச்சத்து, சுண்ணாம்புச்சத்து,பாஸ்பரஸ், கார்போ
ஹைட்ரேட், கொளுப்பு, விட்டமின் ஏ, விட்டமின்
சீ முத்லியன உடலில் சேர்கின்றன.
கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோ
ளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும்
சோகை நோய் வரப்பயப்படும்.
ஊரில் தொற்று நோய்ப் பரவல் இருந்தாலும் கரு
வேப்பிலை சாப்பிட்டால் அது எம்மைத்தொற்றாது.
புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது.
அதுவும் வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை
சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும்.
வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும்
குணம் கருவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப்
போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக்
கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி
யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்ச
லைத்தடுக்கும்
தலைமுடி கரு கருவென வளரவும் கண்களுக்கு
ஒளி தரவும், சுக்கிலம் (Sperm) விருத்தி அடைய
வும் கருவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்து உத
வி செய்கிறது
முகத்தில் ஏற்பட்ட அம்மைத்தளும்பை நீக்க
கருவேப்பிலை- ஒரு பிடி, கசகசா-- ஒருகரண்டி
கஸ்தூரிமஞ்சள்.--ஒரு துண்டு
இவைமூன்றையும் அம்மியில் வைத்து அரைத்து
அந்த விழுதை முகத்தில் தடவி( பற்றுப்போடுவது
போல்) 30 நிமிடம் ஊறியபின் குளிர்ந்த தண்ணீரி
னால் கழுவி விடுங்கள். இப்படி 15 நாட்கள் செய்து
வர தளும்புகள் மறைந்துவிடும்.
பசிஎடுக்கவிலலையா? சாப்பாடு செமியாமல்
கஷ்டப்படுகிறீர்களா, கருவேப்பிலையை வறுத்
து அதனுடன் மிளகு,சீரகம், சுக்கு சேர்த்து பொடி
செய்து கொண்டு உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்
து சாப்பிடுங்கள். பசி அசிரவேகத்தில் கிளர்த்து
எழும்பும் நீங்களும் கொண்டுவா கொண்டுவா
பசி தாங்கமுடியவில்லையே என்று கேட்பீர்கள்.
Tuesday, October 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பாட்டி வைத்தியம் நல்லாயிருக்கு..
good one
நண்பர்கள் கலையரசனுக்கும்
மித்திரனுகும் உங்கள் வரவுக்கும்
கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.
ரொம்ப அருமையான தகவல் நானும் கருவேப்பிலையை பற்றி நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறேன், குழம்பு, ரசத்துக்கு கூட சில சமையம் அபப்டியே ஒரு பன்ச் அரைத்து சேர்த்து செய்வேன், மணம் தூக்கலா இருக்கும்.
நல்ல தகவல். நானும் அடிக்கடி கருவேப்பிலை குழம்பு, துவையல்,பொடி,சட்ணி, சாதம் செய்வேன், உடம்பிற்க்கு ரொம்ப நல்லது.
நம்ம பக்கமும் வந்து எட்டி பாருங்க.
http://vijisvegkitchen.blogspot.com
Post a Comment