Friday, October 9, 2009

சீரகத்தின் மருத்துவக்குணம்

பலர் நினைப்பது போல் சீரகம் உணவில் வாசத்திற்
காக சேர்க்கப்படுவதில்லை. 25 ம்கும் மேற்பட்ட
நோய்களைத்தீர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தில் ஏழு வகைச்சீரகம் உண்டு. அவையாவன
நற்சீரகம், பெருஞ்சீரகம்,கருஞ்சீரகம், காட்டுச்சீரகம்,
பிலப்புச்சீரகம், நட்சத்திரச்சீரகம், செஞ்சீரகம் எனப்
படும்.

இதில் பெருஞ்சீரகமும் நற்சீரகமும் மட்டுமே
எங்கள் உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்
தப்படுகின்றன.

முக்கியமாக கீழ் வருபனவற்றைச்சீரகம் குண
மாக்குகிறது.வாய் நாற்றத்தைப்போக்கும், வாய்ப்
புண் குணமகும், தொண்டைக்கட்டு நீங்கும்,
நாக்குத்தடிப்பு நீங்கும், வாய் ஊறல் நிவர்த்தி
யாகும், இருமல் குறையும்,மார்புவலி குறை
யும், மூச்சுத்திணறல் நீங்கும்,மலக்கட்டு எடுப
டும்,ஜீரணம் ஒழுங்காகும்,வயற்றுவலி நீங்கும்,
சூதக வலி நீங்கும், சீதா பேதி குணமாகும்,பல் வலி
குறையும், எலும்பு பலமடையும்,உடல் வறட்சியை
போக்கும், வியர்வை நாற்றத்தைப்போக்கும், வாந்தி
குமட்டலை நீக்கும்,பித்தமயக்கம், ஜுரம் தணியும்.

கருஞ்சீரகம் நீரழிவு நோயைக்கட்டுப்படுத்தும் மருந்
துகளில் சேர்க்கப்படுகிறது.

மூத்திர எரிச்சலுக்கும் குளிர்ச்சிக்கும் கீழ்கண்ட முறை
யில் இந்தக்குடிநீரை ஒவ்வொருநாளும் தயாரித்துக்
குடிக்கவும்.

நாலு லிட்டர் தண்ணீரை நன்றாகக்கொதிக்கவைத்து
வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிஎடுத்த கொ
திநீரில் 50 கிராம் சீரகத்தைப்போட்டு மீண்டும் கொதிக்
கவைத்து இறக்கி வைத்துவிடவும். இந்த நீரையே குடி
நீராக எப்போதும் பயன்படுத்திவந்தால் மேலே சொல்
லிய பலன்களில் பலவற்றைப்பெறலாம்.

சிறப்பாக மூத்திர எரிச்சலையும் ஜீரணம் இன்மையை
யும் இந்தக்குடிநீர் பூர்ணமாகக் குணமாக்கும்.

100 கிராம் சீரகம் எடுத்துக்கொண்டால் அதில் கீழ்கண்
ட விகிதாசாரத்தில் சத்துக்கள் இருக்கின்றன.

புரதம். 18.7 கி
கொழுப்பு 15.0 கி
தாது உப்பு 5.8 கி
கார்போஹைரேட் 36.6 கி
சுண்ணாம்பு 511 மில்லி கிராம்
இரும்பு 310 மில்லிகிராம்
கரோட்டின் 522 மில்லிகிராம்
நையசின் 2.6 மில்லிகிராம்
விட்டமின் சி 3.0 மில்லிகிராம்.


சீரகம் எங்கள் சமையலில் பங்குபற்றினாலும்
இது ஒரு மருந்துச்சரக்கு என்பதைத்தெரிந்து
கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment