Sunday, October 4, 2009

எள்ளின் மருத்துவக்குணம்

நீங்கள் உங்கள் உடல் பருமன் குறையவேண்டும் அதாவது
உடல் இளைக்கவேண்டும் என்றாலும் அல்லது மெலிந்த
உடல் பருக்கவேண்டும் என்றாலும் கீழ் கண்டமுறையில்
எள்ளைச்சாப்பிட்டால் நீங்கள் விரும்பிய பலனைப்பெறலாம்.

கலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி அல்லது
தேநீர் குடியாமல் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று
தண்ணீர் குடிக்கவேண்டும். (3) மூன்று மணி நேரம் வேறு
எதுவும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். இப்படிச்சாப்பிட்
டால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் (மூத்திரம்) கழிக்கும்
பழக்கத்தை நிற்ப்பாட்ட இரவில் வெண்முள்ளங்கியுடன்
எள் சேர்த்துச்சாப்பிடக்கொடுத்து வர அந்தப்பழக்கம் இல்
லாமல் போய்விடும்.

மூலநோயால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடக்
கீழே சொல்லியபிரகாரம் எள் வைத்தியம் செய்தால் குண
மாகும்.
எள். ----------- 5 கிராம்
ஆட்டுப்பால். 5 கிராம்
சர்க்கரை. . 5 கிராம்

எள்ளை விழுதாக்கிக்கொண்டு அதனுடன்ஆட்டுப்பாலும்
சர்க்கரையும் சேர்த்து ஒன்றாகக்கரைத்து க் குடித்து வந்
தால் பலன் தெரியும்.

பற்க்கள் பலவீனமாக இருந்தால் அதை நிவர்த்தி செய்ய
தினமும் காலையில் ஒரு கைபிடி எள் சாப்பிட்டு வந்தால்
பற்க்களின் பலவீனம் நீங்கி பல் பலப்படும் அதனால் பற்க்
களின் வீழ்ச்சியைத்தடுத்து நிறுத்தலாம்.

தொழுநோய் குணமாக எள்ளைக்கீழ் கண்டமுறையில்
சாப்பிட்டு வரப்பலன் கிடைக்கும்

எள் ------- ------ 5 கிராம்
உப்பு ------------ 5 கிராம்
மிளகாய் ------ 5 கிராம்

மூன்றையும் லேசாக வறுத்து இடித்து பின் அதைச்சலித்து
எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

காலை மாலை இரு வேளையும் இரண்டு சிட்டிகை அளவு
பொடியை அரைத்தேக்கரண்டி பசு நெய்யில் குழைத்துச்
சாப்பிடவேண்டும். இப்படி 21 நாட்கள் உண்டு வந்தால் பலன்
தெரியும். மருந்து என்று சாப்பிடுங்காலங்களில் பாவற்காய்
சாப்பிடுவதைத்தவிர்க்கவேண்டும்.


5 comments:

பின்னோக்கி said...

எள்ளுல இவ்வளவு நல்லது இருக்கா ? நன்றி எடுத்து சொன்னதுக்கு

Menaga Sathia said...

எள்ளைப் பத்தி தெரிந்துக் கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி!!

M.Thevesh said...

பின்னோக்கி said...

எள்ளுல இவ்வளவு நல்லது இருக்கா ? நன்றி எடுத்து சொன்னதுக்கு

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

M.Thevesh said...

Mrs.Menagasathia said...

எள்ளைப் பத்தி தெரிந்துக் கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி!!

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Vishaya janam said...

பச்சரிசி ஒரு பங்கிற்கு 1/4 பங்கு எள் 1/8 நெய் எள் சாதம் செய்ய சேர்க்க வேண்டும்

Post a Comment