புளியோதரை செய்யும் முறை.
முதலில் வெந்தயப்பொடி செய்துவைத்துக்கொள்ளவும்.
செய்யும் முறை பின்வருமாறு.
வெந்தயம் .............. அரை ஸ்பூன்.
வற்றல் மிளகாய். .. மூன்று
உப்பு ..........தேவையான அளவு
ஒரு இருப்புச்சட்டியில் எண்ணை விடாமல் முதலில் வெந்தயத்தை
வறுத்துக்கொள்ளவும்.பின்பு அதே இருப்புச்சட்டியில் சிறிது எண்ணைவிட்டு
மூன்று வற்றல் மிளகாயை வறுத்துக்கொள்ளவும். அம்மியில்
வெந்தயம், வறுத்தெடுத்தமிளகாய் தேவையான அளவு ஸ்பூன் உப்பு சேர்த்து பொடியாக்கி
வைத்துக்கொள்ளவும்.
இப்போது புளிக்காச்சல் செய்து கொள்ளவேண்டும். செய்யும் முறை பின்வருமாறு.
தேவையான பொருட்கள்:
புளி ----ஒரு எலும்பிச்சம் பழம் அளவு.
உளுத்தம் பருப்பு ----- ஒரு ஸ்பூன்.,
கடலைப்பருப்பு-------ஒரு ஸ்பூன்,
வற்றல் மிளகாய்---- மூன்று,
கடுகு------கால் ஸ்பூன்,
பெருங்காயம் -- ---ஒரு சிறிய துண்டு.
உப்பு தேவையான அளவு
இப்போது புளியைக் கெட்டியாக கரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு இருப்புச்சட்டியில்
அரைக்கரண்டி நல்லெண்ணை விட்டு எண்ணை காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு,
உளுத்தம் பருப்பு , மிளகாய் வற்றல்மற்றும் பெருங்காயம் வறுத்துக்கொண்டு
தயாராக வைத்திருக்கும் கரைத்த புளியை இருப்புச்சட்டியில்கொட்டி கொதிக்கவிட
வேண்டும். கொதிக்க ஆரம்பித்த பின் முதலில் தயாரித்துவைத்திருக்கும்
வெந்தயப்பொடியில் அரை வாசிப்பொடியை கொதிக்கும் புளியில் போட்டு கொதிக்க
விடவும். தீயைக்குறைத்து சுமார் 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரைகொதிக்க
வேண்டும். புளி வாசனை போய் புளிக்காச்சல் கெட்டியானதும் இறக்கிவைத்துவிடவும்.
இனிமேல்தான் புளியோதரை செய்யப்போகிறிர்கள்
அரிசி ---- 200 கிராம்.
நல்லெண்ணை --- அரைக்கரண்டி
முந்திரிப்பருப்பு ---4, வறுத்த நிலக்கடலை -----10
சாதத்தை உதிர் பதத்தில் வடித்துக்கொள்ளவும். சாதம் ஆறிய பின் ஒரு பெரிய பாத்திரத்
தில்சாதத்தைக்கொட்டி ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி அரைக் கரண்டி நல்லெண்ணை
வறுத்துவைத்துள்ளமுந்திரிப்பருப்பு நிலக்கடலை எல்லாவற்றையும் போட்டுக்கிளறவும்.
அத்துடன் வெந்தயப்பொடியின் மற்றப்பாதியையும் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது தேவையான அளவு புளிக்காச்சலைக் கொட்டிக் கிளறவும். நன்றாகக்
கிளறிக்கொண்டால் புளியோதரை ரெடியாகிவிடும்.
( முழுப்புளிக்காச்சலையும் சேர்த்துக்கொள்ளவேண்டாம் புளி கூடிவிடும் சாப்பிடமுடியா
மல்போய்விடும்- மிகுதியைப் பத்திரமாக வைத்துக்கொண்டால் வேறு தேவைக்குப்
பாவித்துக்கொள்ளலாம்)
Sunday, September 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment