Sunday, July 11, 2010

ரவை உப்புமா செய்யும் முறை.

ரவை உப்புமா செய்வதற்குத்தேவையானவை.

சின்ன ரவை .... 150 கிராம்
கடுகு .... அரை ஸ்பூன்
உழுத்தம் பருப்பு. அரை ஸ்பூன்
வற்றல் மிளகாய் ஒன்று (1)
பச்சை மிளகாய். இரண்டு (2)
இஞ்சி .... ஒரு துண்டு (1)
முந்திரிப்பருப்பு. மூன்று (3)
உப்பு. அரை ஸ்பூன்.
கருவேப்பிலை. கொஞ்சம்

செய்யும் முறை:

வெறும் இருப்புச்சட்டியைக் காயவைத்து அதில் ரவையைக்
கொட்டி வறுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.பிறகு அதே
இருப்புச்சட்டியில் அரைக்கரண்டி எண்ணய் விட்டுக் கடுகு, உழுத்
தம் பருப்பு,துண்டு துண்டாக்கிய முந்திரிப்பருபு, மிளகாயை வறுத
துக்கொண்டு பிறகு இஞ்சி,பச்சை மிளகாயைப் போட்டு வறுத்த
பின்பு 300 மில்லி லிட்டர் (ஒன்றரைஆளாக்கு) தண்ணீரைக் கொட்டி
அரை ஸ்பூன் உப்பையும் கருவேப்பிலையையும் போடவும்.தண்ணீர்
நன்றாகக்கொதிக்கும் போது ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக்
கொட்டிக்கொண்டே கிளறவும் 2 ஸ்பூன் நெய் விட்டு அடிப்பிடிக்காமல்
கிளறி பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் இறக்கிவைக்கவும்.ரவை
வேகவில்லை என்றால் மேலும் ஒரு கரண்டி கொதித்த தண்ணீர் விட்
டுக்கிளறி இறக்கவும்.வெங்காயம் சேர்க்க விரும்பினால் பொடிப்பொடி
யாக நறுக்கி ரவை பாதி வேகும் போது சேர்க்கவேண்டும்.


2 comments:

Chitra said...

வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!
Follow பண்றேன். :-)

Unknown said...

வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

Post a Comment