சிலபேருக்கு வரட்டு இருமல் தொடர்ந்து கொண்டே
இருக்கும். இவர்களுக்கு பாட்டி சொன்னவைத்தியம்
என்ன என்று பார்ப்போம்.
தேவையான மருந்துச்சரக்குகள்.
மல்லி ...... ஒரு கைய் சிறங்கை அளவு.
இஞ்சி...... ஒரு சின்னத்துண்டு
பனங்கற்கண்டு... ஒரு கைய் சிறங்கை அளவு
மல்லியை முதலில் சிறிது நொறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இஞ்சியின் தோலை நீக்கி தட்டி ஒரு கப்பில் போட்டு வைத்துக்
கொள்ளுங்கள். அடுப்பில் தண்ணிரைக் கொதிக்க வையுங்கள்
தண்ணீர் நன்றாகக் கொதித்த தும் இஞ்சி தட்டிப்போட்ட கப்பி
னுள் மல்லி பனங்கற்கண்டு இரண்டையும் போட்டு கொதி நிலை
யிலுள்ள கொதிநீரை ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். நன்றாக
ஆறிய பின்பு அந்த கஷாயத்தை வடிகட்டி காலை, மாலை
மறு நாள் காலை என மூன்றே மூன்று வேளை சாப்பிடவும்.
அப்படிச்சாப்பிட்டால் இந்த நாட்பட்ட வறட்டு இருமல் காணாமல்
போய்விடும் என்று பாட்டி சொல்லியுள்ளார். நாங்களும்
முயற்சிப்போம் பயன் பெறுவோம்.
Saturday, August 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்ல தகவல்.
பயனானது.
Chandravathana உங்கள் வருகைக்கும்
ஆதரவுக்கும் நன்றிகள்
நல்ல தகவல், பயன்படுத்தி பார்த்து விட்டு திரும்ப வருகிறேன்.
Malli enral kotthu malliya?
Post a Comment