Saturday, August 15, 2009

[ நாட்பட்ட வறட்டு இருமல் ]

சிலபேருக்கு வரட்டு இருமல் தொடர்ந்து கொண்டே
இருக்கும். இவர்களுக்கு பாட்டி சொன்னவைத்தியம்
என்ன என்று பார்ப்போம்.

தேவையான மருந்துச்சரக்குகள்.

மல்லி ...... ஒரு கைய் சிறங்கை அளவு.
இஞ்சி...... ஒரு சின்னத்துண்டு
பனங்கற்கண்டு... ஒரு கைய் சிறங்கை அளவு

மல்லியை முதலில் சிறிது நொறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
இஞ்சியின் தோலை நீக்கி தட்டி ஒரு கப்பில் போட்டு வைத்துக்
கொள்ளுங்கள். அடுப்பில் தண்ணிரைக் கொதிக்க வையுங்கள்
தண்ணீர் நன்றாகக் கொதித்த தும் இஞ்சி தட்டிப்போட்ட கப்பி
னுள் மல்லி பனங்கற்கண்டு இரண்டையும் போட்டு கொதி நிலை
யிலுள்ள கொதிநீரை ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். நன்றாக
ஆறிய பின்பு அந்த கஷாயத்தை வடிகட்டி காலை, மாலை
மறு நாள் காலை என மூன்றே மூன்று வேளை சாப்பிடவும்.
அப்படிச்சாப்பிட்டால் இந்த நாட்பட்ட வறட்டு இருமல் காணாமல்
போய்விடும் என்று பாட்டி சொல்லியுள்ளார். நாங்களும்
முயற்சிப்போம் பயன் பெறுவோம்.

Friday, August 14, 2009

[மதுமேகம் என்னும் நீரழிவு நோய்]

பல நோய்கள் ஆங்கில வைத்தியத்திற்குக் கட்டுப்படுவதில்லை.
ஆனால் சில பாட்டி வைத்திய முறைகள் ஆச்சரியப்படும்படி
நோய்கள் முற்றாகக் குணமான சம்பவங்கள் ஏராளமாக இருக்
கின்றன.பெரும்பாலும் ஆங்கிலவைத்தியத்தில் எங்கள் மக்கள்
வைத்துள்ள நம்பிக்கையில் பத்துச்சதவீதங்கூட தமிழரின்
பண்டைய வைத்தியமான சித்தவைத்தியத்தில் வைப்பதில்லை.

அந்த சித்த வைத்தியத்தின் ஒரு துளிதான் எங்கள் பாட்டிமார்
கூறிய கை வைத்தியம்.

நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பாட்டி சொல்லும் வைத்திய
முறையைப் பார்ப்போம்.

தேவையான மருந்துச்சரக்குகள்.

கோதுமைநொய்..............100 கிராம்
பார்லி அரிசி............... 100 கிராம்
கருஞ்சீரகம்............... 100 கிராம்
கருவேலம் பிசின்....... 100 கிராம்

இவை நான்கையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஏழு கப்
தண்ணீர் சேர்த்துக்கொண்டு நன்றாக எரியும் அடுப்பில்
ஏற்றி பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பதினோராவது
நிமிடம் அந்தக் கஷா யத்தை அடுப்பை விட்டு இறக்கி ஒரு
பக்கத்தில் வைத்துவிடவும்.
நன்றாக ஆறி குளிர்ச்சி யடைந்த கஷாயத்தை ஏழு பங்காகப்
பகிர்ந்து வைத்துக்கொள்ள்வும்
ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு
பங்கைச்சாப்பிடுவும்.ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்ட
பின்பு மறுபடியும் முன் போல் கஷாயத்தை தயாரிக்க
வேண்டும். இரண்டாவது தயாரித்த கஷாயத்தைமுன் போல்
எழு பங்காக்கி ஒன்றுவிட்டு ஒரு நாள் சாப்பிடவும்.

அதன் மேல் அந்த கஷாயம் சாப்பிடும் தேவைஏற்படாது என்பது
பாட்டி சொல்லும் வார்த்தையாகும். நாங்களும் முயன்று நோயைத்
தீர்ப்போமே.